TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...
இறப்பைத் தவிர்ப்பது கானல் நீரே
ஜியார்ஜியா நாட்டில் ஒரு காலத்தில் மக்டானா என் அரசி ஆண்டு வந்தாள் . நீதியை நிலை நாட்டுவதிலும் ஞானத்திலும் நிகரற்றவளாகத் திகழ்ந்ததால் , மக்கள் அவளை மிகவும் நேசித்துப் புகழ்ந்தனர் . அவளுக்கு ஓர் அழகான மகன் இருந்தான் . அரசியின் மகிழ்ச்சிக்குத் தளமாக மகன் இருந்தான் . தனது மகன் , இளவரசன் ராஸ்டோ மெல்லுக்காவே அரசி வாழ்வதுபோல் இருந்தது .
அவன் வலிமையான இளைஞனாக வனர்ந்த போது இளவரசனைப் பற்றிய சில நடவடிக்கைகள் அரிசியைக் குழப்பமடையச் செய்தன . அவளது வாழ்வைத் துன்பமயமாக்கியது . அரண்மனைத் தோட்டத்தின் ஒரு மூலைக்கும் சென்று இளவரசன் தனிமையில் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டேயிருப்பான். இளவரசனின் மன அமைதியையும் மனத்தையும் பாதிப்பது எதுவென்று அரசியால் புரிந்துகொள்ள முடியவில்லை . பேசிப் பழகாமலும் ,தனிமையில் சிந்திப்பதும் நோயில்லாத நிலையிலும் உடல்சோர்வைக் காட்டிக் கொடுக்கிறது அன்று அரசி நினைத்தாள் . அவள் மகனைப் பார்தது மகனே உன் மனதை எது வாட்டுகிறது?ஏன் இப்படி இருக்கிறாய்?"என்று கேட்டாள் . இளவரசனோ அம்மா எனது தந்தை எங்கே ?ஏன் அவரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை? என்று கேட்டான் . அரசியும் அவனது தந்தை இறந்துவிட்டார் என்றும் அவர் மீண்டும் வரவெ மாட்டார் என்றும் மகனுக்குப் புரிய வைத்தாள் .இதைக் கேட்டதும் முன்பிருந்தை விடவும் மற்ற அனைத்தையும் விட உற்சாகமிழந்தான் . மண்ணில் பிறந்த மக்கள் மீண்டும் ஏன் மண்ணுக்குள் செல்லுகின்றனர் என்று இளவரசன் வியந்தான்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்காமல் இங்கே நிரந்தரமாய் வாழவேண்டும் என்று விரும்பினான் . இளவரசன் இறப்பை வெறுத்தான் . அதை நினைத்து திடுக்கிட்டான் .முடிந்தால் இறப்புக்கே சாவல்விடத் தீர்மானித்தான். அவனது தாயார் அரசி ஒவ்வொரு மனிதனும் எந்தவித விதி விலக்கும் இன்றி இழக்கக் கூடியவன்தான் என்று தெள்ளத்தெளிவாகப் புரியவைத்தப்போதும் அவன் ஏற்றுக்கொள்ள வில்லை .
தனது பாசமிகு அம்மாவையும் விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறத் தீர்மானித்தான் இளவரசன். இனப்பற்று நிலையைக் காண்பதற்கு ஊக்கமுடன் முயற்சியைத் தொடங்கினான்.
ஒரு சமவெளியை அடைந்ததும் அங்கே ஒரு மான் நின்று கொண்டிருப்பதை இளவரசன் பார்த்தான் .அதற்கு பெரிய அழகான கொம்புகள் இருந்தன .மார்கம் பொதுவாகப் பேசுவதில்லை.ஆனால் அந்த மான் பேசியது . இளவரசனைப் பார்த்து இந்த வானதரத்தில் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்? என்று கேட்டது மான். இறப்பைப் தவிர்க்கும் நிலையைக் குறித்து இளவரசன் பேசினான் . இறப்பற்ற நிலை என்ற ஒன்று எங்கும் கிடையாது .ஒவ்வொரு மனிதனும் மிருகமும் இறப்புக்கு உட்பட்டதுதான் . ஒருவரும் இறப்பின்றி நிரந்தராமாக வாழ முடியாது . இருந்தபோதிலும் எனது கொம்புகள் வின்னைத் தொடுமளவுக்கு வளர்கின்ற வரையில் நீ இங்கேயே இரு .நீ நீண்டகாலம் வாழலாம் . அது நம்ப முடியாத நீண்டகாலம் ஆகும் என்று மான் சொன்னது.
நூற்றாண்டுகள் என்பது இறப்பற்ற நிலை கிடையாது .ஆனால் நான் தேடுவது இறப்பற்ற நிரந்தர நிலையான வாழ்கை . இறப்பிலிருந்து முழுமையான விடுதலை இதற்கு நீ உதவி செய்ய முடியாது .எனவே இளவரசன் . இளவரசன் மிகவும் சிரம்பப்பட்டு நடந்தான் ,நடந்துகொண்டே இருந்தான் .மிக உயராமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர் வரும் வரைக்கும் நடந்தான்.
அங்கே ஒரு பாறையில் காகம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது .இளவரசன்ன் தேடுதல் வேட்டை ஒரு பகலும் ஓர் இரவும் தொடர்ந்தது .பாறையில் கடுமையாக ஏறியதும் காகத்தின் அருகில் சென்றான்.
அவன் சிகரத்தை அடைந்தபோதும் காகம் அங்கேயே அமர்ந்தபோது . இளவரசன் காகத்திடம் . அருமைக் காகமே இறப்பைத் தவிர்க்கும் நிலையைத் தேடுகிற எனது வேட்டையும் வேட்கையும் என்னை உன்னிடத்தில் அழைத்து வந்தது . இறப்பே இல்லாத உலகம் எங்கே இருக்கிறது ? உனக்குத் தெரிந்தால் தயவுசெய்து எனக்குச் சொல்லேன் என்று கேட்டான்.காகமோ எனக்குத் தெரிந்து இறப்பைப் தவிர்த்த மனிதனோ மிருகமோ பறவையோ கிடையாது .உனது வேட்டை பயனற்ற பயணமாகும்.
அனைத்து உயிரினங்களுக்ளும் அழியக் கூடியது என்று உணர்வதிலேயே ஞானம் உள்ளது .எவ்வளவு விரைவாக உனது முயற்சியைக் கைவிடுகிறாயோ அந்த அளவுக்கு உனக்கு நல்லது .இது ஒரு வீண்முயற்சி .உனக்கு எந்தவித பயனும் கிடையாது.நான் சொல்கிறேன் கேள் என்றது.
Comments
Post a Comment