TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...
Ramayanam
* இராமாயணம் மிகப் பழங்காலத்தில் மக்களிடையே வழங்கி வந்த கதையாகும். இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசம் என்னும் வட செல்லுக்குப் பழைய வரலாறு என்பது பொருளாம். இராம இராவணப்போர் 16 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக ஒர் ஆராய்ச்சி கூறுகிறது.
* வட மொழியில் இராம கதையை எழுதியவர் வாள்மீகீ, வாள்மீகி இராமாயணத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பாடலுகள் உள்ளன. வால்மீகி வடநாட்டுப் பண்பாட்டுக்கேற்ப தம் காப்பியத்தைப் படைத்துள்ளனர்.
*இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப் பட்டுள்ளது. தமிழில் அதனை உருவாக்கியவர் கம்பர். கம்பர் தஞ்சையை அடுத்த திருவழுந்தூரைச் சேர்ந்தவர்.
*வடமொழிப் புலமை உடைய கம்பர் வாள்மீகி இராமயணத்தைத் தெளிவாகப் பயின்றார். வடமொழி கற்ற அந்தணருடன் இரவோடு இரவாக இராமகாதையை ஆய்வு செய்வார் . பகலில் பாடல் எழுதுவார் ஒரு நாளைக்கு கம்பர் 700 பாடல் எழுதியாக ஒரு பழைய பாடல் தெரிவிக்கிறது. அப்பாால் கருத்துப்படி பதினைந்து நாளில் இராமயணத்தை முடித்திருக்க வேண்டும்.
பாடல் வரிகள் வருமாறு:
'விழு ஞாயிறு எழுந்தவன்முன் மறை
வேதியரூடன் ஆராய்ந்து
எழு ஞாயிறு விழுவதன் முன்
கவி பாடினது எழுநானூறு '
*இராம காதை அறத்திற்கும், மறத்திற்கும் நடைபெற்ற போரை விளக்குவது, அறத்தின் நாயகனாக இராமனும், மறத்தின் நாயகனாக இராவணனும் திகழ்கின்றனர் முடிவில் மறவீழ்கிறது அறம் வெல்கிறது.
*கோசல நாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து அயேத்தி, அங்கு வாழ்ந்தோர் செல்ல செழிப்பும் , பண்பாட்டுக் கொழிப்பும் கொண்டு விளங்கினார். அவர்தம் செல்ல நிலையும், உள்ள நிலையும் புகாரையே நினைவுபடுத்தின. கம்பர் கோசல நாட்டைப் பற்றிக் கூறும்போது காவிரி நாட்டை போன்றது என்கிறார் . தமிழர் நெறியினின்றே கம்பர் தம் காப்பியத்தைத் தொடங்கியுள்ளார்.
* தசரதனஅ மனைவியர் மூவர், மூவருக்கு நீண்ட நெடுங்காலமாக மகப்பேறு இல்லை . மனதில் உள்ள குறையை மன்னன் தன் மாச்சபையில் எடுத்துச் சொன்னான். அவையோர் பல்வேறு கருத்துகளை வழங்கினர் . முடிவாக புத்திரன் வேண்டி யாகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது . யாகத்தை வசீஷ்டர் தலைமையேற்று நடத்தினர் . யாகத்தில் பூதமொன்று தோன்றியது . அது கொடுத்த பாயசத்தை நான்காம் பிரித்து கோசலைக்கு ஒரு பகுதியையும் ,கைகேயிக்கு ஒரு பகுதியையும் , கைகேயிக்கு ஒரு பகுதியையும் கொடுத்தார் . சுமத்திரையும் ஒரு பகுதியை உண்டார். எஞ்சியிருந்த ஒரு பகுதியையும் சுமத்திரையை உண்டார்.
*நாட்கள் நகர்ந்தன: முவரும் கருவுற்றனர் . கோசல மன்னன் தசரதச்் சக்கரவர்த்தி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். கோசல நாட்டில் பகவான் திருமால் அவதாரம் எடுக்கும் காலம் வந்தது . கோசலை வயிற்றில் திருமாலின் ஏழாவது அவதாரமான இராமன் தோன்றியனார்் . கைகேயி வயிற்றில் பரதனும் , சுமத்திரை வயிற்றில் இலக்குவன் ,சத்ருகன் என்ற இருவரும் தோன்றினார்.
*அயோத்தி மாநகர் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது . எங்கும் விழாக்கோலம் . தசரதன் ஏளைழகளுக்குப் பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்தான் . முனிவர்கள் பகவானின் அவதராத்தால் தங்கள் துயர்தீரும் என மகிழ்ந்தனர்.
*நாளொரு மேனியும் , பொழுதுதொரு வண்ணமுமாக நால்வரும் வளர்த்தனர். அரசிளங் குமரர் வசிஷ்டரிடம் வில்வித்தை பயின்றனர். அவர்களின் உடல் வளர்ச்சியைப் போலவே கலை வளர்ச்சியும் இருந்தது .
*இராமனுடன் இலக்குவனும் , பரதனுடன் சத்துக்களும் இனைந்திருந்தனர். இரட்டையர்கள் இனையில்லாத் திறமை கொண்டிருந்தனர்.
*இராமன் வில்பயிற்சி பயிலும்போது மண் உருண்டையை வைத்துக் கூனியின் முதுகில் அடித்தான் அவளோ அதை வினையாக நினைத்தாள் . பதிலுக்குப் பதில் பழிவாங்கவும் காத்திருந்தாள் . அதுவே பிற்காலத்தில் இராமன் காடு செல்லக் காரணமாக அமைந்தது . விளையாட்டு விபரீதமாகும் என்பது உண்மையாயிற்று.
*இந்தக் கூனிதான் கைகேயின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது இவள் தான் கையேயின் மனதை மாற்றியவள். இராமனிடம் தசரதன் அளவற்ற அன்பை பொழிந்தார் . அதுவே அவர் உயிருக்கு இறுதியாக அமைந்து விட்டது.
*விசுவாமித்தரன் தன் யாகத்துக்குப் பாதுகாவலனாக அழைத்துச் சென்றார் . இராமன் யாகத்துக்கு தடையாக இருந்த தாடகையை அழித்தான். பின்னர் மிதிலை சென்று சிவதனுசை வளைத்துச் சீதையை மணம் புரிந்து அயோத்தி திரும்பினனான்.
*இராமனுக்கு முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் இனிதே நடந்து கொண்டிருந்தன. வஞ்சகி கைகேயியின் சூழ்ச்சியால் இராமன் காடு சென்றான் . பரதன் நாடாளுவது என்ற முடிவும் ஏற்பட்டது .
*தசுரதன் தன் உயிர் நீத்தார்.பரதன் கேகய நாட்டிலிருந்து வந்து நாயைக் கடிந்தான். பின் கானகம் சென்று இராமனை அழைத்தான் . இராமன் மறுக்கவே பாதுகையே எடுத்து வந்து பரதன் ஆட்சி செய்தான்.
*இராமன் கானகத்தில் குகனின் அன்பான உபசரிப்பைப் பெற்றான். குகனைத் தன் ஐந்தாவது சகோதரனாகினான். பின்னர் முனிவர்கள் உச்சரிப்பை ஏற்றான் கவந்தன் போன்ற அரக்கர்களை அழித்தான் பின்னர் மாரிசனின் (மாயமான்) வஞ்சனையால் சீதையை இராவணன் கவர்ந்து சென்றான் . இராமனும் , இலக்குவனும் ஆறாத் துயரில் மூழ்கினர்.
*கிட்கிந்தையில் சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது . வாலியைக் , கொன்று கிட்கிந்தை அரசைச் சுக்ரீவனுக்கு அளித்தான் இராமன் வானர மன்னனான சுக்ரீவனை ஆறாவது சகோதரனாகக் கொண்டான்.
*வானரப் படை சீதையைத் தேடும் பணீயைத் தொடங்கியது . ஜாம்பவான் அறிவுரைப்படி அனுமான் சீதையைத் தேடி தென் திசை நோக்கிப் புறப்பட்டான். அசோகவனத்தில் சீதையைக் கண்டான் . இலங்கையை எரியூட்டிய பின்னர் இராமனை வந்தடைந்தான்.
*இராமன் வாலியின் மகன் அங்கதனை இலங்கை வேந்தன் இராவணனிடம் தூதுவிட்டான். அங்கதன் இராவணனிடம் தேவியை வீடு இன்றேல் உன் தன் ஆவீயை வீடு என்றான்.
* இராமனுக்கும் , இராவணனுக்கும் கடும்போர் நடந்தது . போர் தொடங்கு முன்பே விபீடணன் இராமனிடம் சரணாகதி அடைந்தான் . இராமன் விபீடனைச் சகோதரனாக என்னி விபீடணனோடு எழுவரானோம் என்றான்.
*இராம, இராவணன் போர் மூண்டது . போரில் இராமன் இராவணனைக் கொன்றான் . இராவணனின் பத்துத் தலைகளும் அவன் பெற்ற வரங்ளும் வீழ்ந்தன . இராமன் சீதையோடு கோசல நாட்டின் தலைநகர் அயோத்தியை அடைந்தான் . பரதனும் ,அயோத்தி மக்களும் இராம, இலக்குவரை இன்முகத்தோடு வரவேற்றனர் .
It's interesting story
ReplyDelete